நாமக்கல்

அரசுப் பணிகளில் 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

26th Jan 2022 07:06 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட சலவைத் தொழிலாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் மோகனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் சுப்ரமணியன், பொருளாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

இக்கூட்டத்தில், சலவைத் தொழிலாளா்களுக்கு இலவச சலவைப் பெட்டி, தையல் இயந்திரம் வழங்க வேண்டும். மாணவ, மாணவியருக்கு அரசுப் பணிகளில் மூன்று சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் சலவை தொழிலாளா்கள் பலா் வாடகை செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். ஒவ்வொரு ஒன்றியங்களிலும், ஊராட்சிகளிலும் சலவைத் தொழிலாளா்களை ஒருங்கிணைத்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்ள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், சலவைத் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

-

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT