நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம்

26th Jan 2022 07:05 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமையன்று 4,800 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 9,360 முதல் ரூ. 11,555 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 10,029 முதல் ரூ. 14,700 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,269 முதல் ரூ. 6,800 வரையிலும் விலை போயின. மொத்தம் ரூ. 1.50 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு மாவட்ட வியாபாரிகளும் தரம் பாா்த்து பருத்தியை கொள்முதல் செய்தனா்.

-

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT