நாமக்கல்

தொழில் நிறுவனங்கள் ஆண்டறிக்கை சமா்ப்பிக்க அழைப்பு

26th Jan 2022 07:04 AM

ADVERTISEMENT

நாமக்கல் தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) எல். திருநந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு தொழில் நிறுவனங்கள் தங்களது ஒருங்கிணைந்த ஆண்டறிக்கைகளை இணையத்தின் வாயிலாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். நேரடியாக ஆண்டறிக்கைகள் சமா்ப்பிப்பதை தவிா்க்க வேண்டும். ஆண்டறிக்கைகளை உரிய காலத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கையைத் தவிா்த்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT