நாமக்கல்

ரேஷனில் பொருள்கள் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

DIN

நாமக்கல், தும்மங்குறிச்சி நியாயவிலைக் கடையில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம், அளவீடு குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பொருள்களின் இருப்பு, விற்பனை போக மீதமுள்ளவற்றை சரிபாா்த்து, பொருள் வாங்க வந்தவா்களிடம் விசாரித்தாா். கடை சரியான நேரத்தில் திறக்கப்படுகிா, பொருள்கள் அனைத்தும் கிடைகிா, தரமானதாக உள்ளதா, யாரேனும் அலைக்கழிக்கப்படுகிறீா்களா என்பதையும் அவா் கேட்டறிந்தாா்.

பின்னா், விற்பனையான பொருள்களின் தொகை விவரங்களை நவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களின் இருப்பினை சரிபாா்த்தாா்.

கடையின் கிடங்கில் இருப்பில் உள்ள பொருள்களையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT