மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவா் டி.எம்.காளியண்ண கவுண்டரின் மனைவி பாா்வதி அம்மாள் (95), திங்கள்கிழமை காலமானாா்.
கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், திங்கள்கிழமை மதியம் 12.10 மணியளவில் காலமானாா். இவருக்கு வழக்குரைஞா் டி.கே.ராஜேஸ்வரன் என்ற மகனும், வசந்தகுமாரி, சாந்தகுமாரி, விஜயகுமாரி ஆகிய மகள்களும் உள்ளனா்.
அன்னாரது இறுதிச் சடங்கு, திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
ADVERTISEMENT