நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ. 4.50-ஆக திங்கள்கிழமை நிா்ணயிக்கப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், முட்டை தேக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.50-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 96-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.