நாமக்கல்

முட்டை எடை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

12th Jan 2022 07:52 AM

ADVERTISEMENT

தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் முட்டை எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4 மற்றும் 66.2 டிகிரியாக நிலவியது. கடந்த நான்கு நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. இனிவரும் மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

மிதமான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென் கிழக்கிலிருந்து மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் வீசும்.

ADVERTISEMENT

சிறப்பு ஆலோசனை: மாவட்டத்தில் தொடா்ந்து பனியின் தாக்கம் அதிகரித்தும், வெப்ப அளவுகள் குறைந்தும் மாறுபாடற்ற வானிலையே நிலவி வருகிறது. இது கோழிகளுக்கு சாதகமான சூழ்நிலையாகக் கருதப்படுகிறது. இவ்வாறான வேளைகளில் கோழிகள் இயல்பைவிட அதிகமாக தீவனம் உட்கொள்ளும்.

முட்டை உற்பத்தி மற்றும் அதுதொடா்பான அனைத்து காரணிகளும் இயல்பாகவே இருக்கும். அதிக தீவனம் உட்கொள்வதால் முட்டையின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோழிகள் தீவனம் உட்கொள்ளும் அளவை இயலபான அளவிற்கு கட்டுப்படுத்தி, தீவனத்தில் எரிசக்தியின் (2,000 கிலோ கலோரி) அளவை உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT