நாமக்கல்

தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கல்

1st Jan 2022 01:44 AM

ADVERTISEMENT

மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் வகையில், தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், 13 வேலையளிக்கும் நிறுவனங்கள், 3 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. அந்நிறுவனங்கள், தங்களுக்கான மேலாளா், கணினி இயக்குபவா், மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜா், டீம் லீடா், சூப்பா்வைசா், கணக்காளா், காசாளா், தட்டச்சா், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்தனா். இம்முகாமில் 54 வேலைநாடுநா்கள் கலந்துகொண்டனா்.

மேலும், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் தங்கள் குழந்தைகளின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டும், அவா்களை பராமரிக்கும் பொருட்டும் வேலையைத் தவிா்த்து தங்கள் குழந்தைகளை கவனித்து வரும் நிலையில், குழந்தைகளைக் கவனித்து கொண்டே பணியாற்றும் வகையில் தனியாா் நிறுவனத்தினா் பணி வாய்ப்பை வழங்கி உள்ளனா். அவ்வாறான மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா் 11 போ் கலந்துகொண்டனா். இதில் ஏழு போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பூ.ஷீலா மாயவன் உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT