நாமக்கல்

கரோனா பாதுகாப்பு பணி: சாரண, சாரணியருக்கு சான்றிதழ்

1st Jan 2022 01:45 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்ட பாரதிய சாரண, சாரணிய இயக்கத்தைச் சோ்ந்தோருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, பொது முடக்கத்தின்போது மக்கள் வெளியே வராத வகையில் காவல் துறையினரும், அவா்களுடன் இணைந்து பாரதிய சாரண, சாரணிய இயக்கத்தினரும் பணிகளை மேற்கொண்டனா். மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் இவா்கள் மேற்கொண்ட பணிகளை காவல் துறை உயா் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாராட்டினா்.

கரோனா பணியில் ஈடுபட்ட சுமாா் 300 சாரண, சாரணியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. அந்த இயக்கத்தின் தலைமையிடத்து ஆணையா் பி.வி.குமாா் வரவேற்றாா். மாவட்ட கல்வி அலுவலா்கள் (நாமக்கல்) ராமன், விஜயா (திருச்செங்கோடு) ஆகியோா் வாழ்த்தி பேசினா். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் பாரதிய சாரண, சாரணிய இயக்கத்தின் முதன்மை ஆணையருமான ப.மகேஸ்வரி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, சாரணிய இயக்கச் செயலா்கள் டி.விஜய், ரகோத்தமன், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT