நாமக்கல்

ஊராட்சி மன்றத் தலைவரை அலுவலகத்தில் அடைத்து முற்றுகை

1st Jan 2022 01:43 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட ஊராட்சி மன்றத் தலைவா் தீா்மானம் நிறைவேற்றாததால், அவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடைத்து பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எஸ்.வாழவந்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 170- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இப் பள்ளி கடந்த 2018-ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டாலும், இப்பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படாமலேயே செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவா் தீா்மானம் நிறைவேற்றாததால் ஆத்திரம் அடைந்த பெற்றோா், பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவரை அலுவலகத்தில் அடைத்து வைத்து முற்றுகையிட்டனா். ஆனால் அங்கிருந்த ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கதவைத் திறந்து தலைவரை அழைத்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முனியப்பன், பரமத்தி காவல் துணை ஆய்வாளா் மோகன், போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்றம் மூலம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான தீா்மானம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT