ராசிபுரம், ஆண்டலூா்கேட் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி முன்பு கழிவுகள் கொட்டப்படுவதைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கல்லூரி சுற்றுச்சுவா் அருகே கோழிக் கழிவுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து கல்லூரி மாணவா்கள் மற்றும் அப்பகுதியினா் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளை செயலாளா் தங்கராஜ் தலைமையில் கல்லூரி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.