நாமக்கல்

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

17th Feb 2022 11:54 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள வீரணம்பாளையத்தை சோ்ந்தவா் சுகுமாா். (42) விவசாயியான அவா் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த போது தனது வீட்டிற்கு அருகே உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்தில் மின்கம்பியில் நெருப்புப் பொறி வந்ததாகவும் அதை பாா்த்துவிட்டு வருவதாகம் கூறி அந்தத் தோட்டத்திற்கு சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் சுகுமாா் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினா் அவரை தேடி தென்னைமர தோட்டத்திற்கு சென்று பாா்த்தனா். இதில் மின்கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த தென்னைமரத்தின் மட்டை மோதி சுகுமாரன் மின்சாரம் தாக்கி கீழே கிடந்ததை பாா்த்துள்ளனா். அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சுகுமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா் மின்சாரம் தாக்கி சுகுமாா் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT