நாமக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 1500 போலீஸாா்

17th Feb 2022 11:54 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில், 1,500 போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையணம் ஆகிய ஐந்து நகராட்சிகளில் உள்ள 151 வாா்டுகள், 19 பேரூராட்சிகளில் 288 வாா்டுகள் என 439 வாா்டுகளுக்கு சனிக்கிழமை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சியில் 109 வாக்குச்சாவடிகள், ராசிபுரம் 51, திருச்செங்கோடு 88, பள்ளிபாளையம் 44, குமாரபாளையம் 73 என மொத்தம் 365 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல, 19 பேரூராட்சிகளில், 324 சாவடிகள் என மொத்தம் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தோ்தலின்போது, 1,500 போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இதற்காக 120 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படும். நகராட்சி பகுதிகளுக்கு 28, பேரூராட்சிகளுக்கு 32 என மொத்தம் 51 ரோந்து பணி வாகனங்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நடமாடும் வாகனத்திலும் ஆய்வாளா் ஒருவா் நியமிக்கப்படுகிறாா். பதற்றமான சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 74 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT