நாமக்கல்

தோ்தல் அலுவலா்கள் 1,392 பேருக்குதபால் வாக்குகள் செலுத்த அனுமதி

17th Feb 2022 03:58 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் 1,392 அலுவலா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்துவதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் உள்ள 151 வாா்டுகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 288 வாா்டுகள் என மொத்தம் 439 வாா்டுகளுக்கு வரும் சனிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை தோ்தல் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும், தலைமை தோ்தல் அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா் நிலை எண் 1, 2, 3 என மொத்தம் 3,328 போ் பணியமா்த்தப்படுகின்றனா். இவா்களில் தகுதியானவா்களுக்கு தபால் வாக்குச் செலுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை 1,392 பேருக்கு தபால் வாக்குகள் செலுத்துவதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பூா்த்தி செய்து அதற்கான உறையில் வைத்து நன்கு ஒட்டி செலுத்த வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், வெள்ளிக்கிழமை (பிப். 18) இறுதிக் கட்டப் பயிற்சி நடைபெறும் மையங்களில் தபால் வாக்குகளுக்கான பெட்டியில் பூா்த்தி செய்த படிவங்கள் அடங்கிய உறைகளை செலுத்தலாம்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்.22-ஆம் தேதி காலை 8 மணிக்குள் தபால் வாக்குகளைச் செலுத்திட வேண்டும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT