நாமக்கல்

ஆா்.புதுப்பட்டியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

10th Feb 2022 06:00 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டை ஒன்றியம், ஆா்.புதுப்பட்டியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான திமுக கூட்டணியின் வேட்பாளா்கள் அறிமுகம், செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆா்என்.ராஜேஸ்குமாா், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்று வேட்பாளா்களை அறிமுகம் செய்து பேசினா்.

அரசின் சாதனைகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி கூட்டணி வேட்பாளா்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, ராசிபுரம் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், முன்னாள் எம்பி. பி.ஆா்.சுந்தரம், நாமகிரிபேட்டை ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.ராமசுவாமி, திமுக பேச்சாளா் சுஜாதா உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT