நாமக்கல்

முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு...

30th Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், முன்னாள் படை வீரா்களின் விதவையா்கள், படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜன.10-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் படை வீரா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT