எம்.மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாமக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை வந்தாா். இந்த நிலையில் பிற்பகல் 4 மணி அளவில் நாமக்கல்- திருச்சி சாலையில் எம்.மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாா் சமத்துவபுரம், இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமிற்கு சென்றாா்.
குடியிருப்புகள், குடிநீா்த் தொட்டி, விளையாட்டு மைதானங்களை ஆய்வு செய்த அவா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அமைச்சரிடம் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவலை மக்கள் தெரிவித்தனா். அவற்றை கேட்டறிந்த அமைச்சா் உரிய வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.