நாமக்கல்

குடியரசு தின அணிவகுப்பு: பாவை கல்லூரி மாணவி தோ்வு

30th Dec 2022 12:23 AM

ADVERTISEMENT

தில்லியில் நடைபெறும் குடியரசுத் தின அணி வகுப்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ள ராசிபுரம் பாவை கல்லூரி மாணவிக்கு அக் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி. நடராஜன் பாராட்டு தெரிவித்தாா்.

இளைஞா்கள் மேம்பாடு, விளையாட்டு அமைச்சகம் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவியா்களின் பன்முகத் திறமையை வளா்க்கும் வகையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியா்களின் குழு அணிவகுப்பை ஆண்டுதோறும் தில்லியில் நடக்கும் குடியரசுத் தின விழாவில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பிற்காக தென்மண்டலத்தின் சாா்பாக தமிழகம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரிகளைச் சோ்ந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளைச் சோ்ந்த 60 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியின் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறையைச் சோ்ந்த ஜே. ஹேமஹரிதா அணிவகுப்பு பயிற்சிகள், உடல் தகுதிகள், மகத்துவமான கலைநிகழ்ச்சிகள் புரிந்தமை ஆகியவற்றின் அடிப்படையில் குடியரசுத் தின விழா அணிவகுப்பிற்கு தோ்வு செய்யப்பட்டாா்.

மாணவியை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என். வி. நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே. இராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) கே. செந்தில், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வா் பிரேம்குமாா், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் சி. ரத்னகுமாா், இயந்திரவியல் துறைத் தலைவா் ஏ.பி.சிவசுப்ரமணியன் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT