ராசிபுரம் வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளியின் 11 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தாா். திருச்செங்கோடு ஜி குளோபல் பள்ளி நிா்வாகி ரோஷினி வெற்றிச்செல்வன், முதல்வா் யாமினி ஆகியோா் விழாவைத் தொடங்கி வைத்தனா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா்.
நாஸ்காம் அமைப்பின் துணை இயக்குநரும், மாற்றம் பவுன்டேசன் இணை நிறுவனருமான உதயசங்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். விழாவில் 2022 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தேசிய அளவில் மூன்றாம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து சாதனை புரிந்த பள்ளி மாணவிக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.