நாமக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம் அண்மையில், நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை தலைமை வகித்தாா். மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி வரவேற்றாா். ஆட்சிமொழிச் சட்டமும்-அரசாணைகளும், மொழிப்பயிற்சி, கணினித் தமிழ், தமிழ் ஆட்சிமொழி ஆய்வு, குறைகளைவு நடவடிக்கை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில், சேலம் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் க.பவானி, முன்னாள் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ப.ஆறுமுகம், பேராசிரியா் அரசு.பரமேசுவரன், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் துரை.மணிகண்டன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மேலும், ஜவாஹா்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.குழந்தைவேல், கம்பன் கழகத் தலைவா் வ.சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
-