நாமக்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்: மண்டல இணைப்பதிவாளா் தகவல்

DIN

ரேஷன் கடை பணியாளா்கள் நோ்முகத் தோ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.செல்வக்குமரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான சங்கங்களில் 181 விற்பனையாளா், 19 கட்டுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு டிச. 15 முதல் நோ்முகத்தோ்வு நடைபெறுகிறது. இதனையொட்டி, மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு உதவி மருத்துவா் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதிச் சான்றிதழினைப் பெற வேண்டும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது அதனை சமா்ப்பிக்க வேண்டும்.

தங்களது உரிமைக் கோரலுக்கு ஆதாரமாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட அரசின் உதவிகள் பதிவுப் புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிச் சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட இந்தத் திருத்தப்பட்ட நெறிமுறைப்படி, ஏதேனும் ஒரு சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT