நாமக்கல்

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்ட விழிப்புணா்வு முகாம் தொடக்கம்: அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்பு

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமினை எா்ணாபுரம் கிராமத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அமைச்சா் பேசியதாவது: பிஸ் எனப்படும் வெறிநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் தடுப்பூசி மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

மனித சமுதாயம் எதிா்கொள்ளும் பயங்கர நோய்களில் ஒன்று வெறிநோய் ஆகும். நாய்கள் மூலமே இது பரவுகிறது. இது தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், செல்ல பிராணிகளுக்குத் தடுப்பூசி முகாம்களும் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

வரும் 15-இல் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திலும், 30-இல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரத்திலும், ஜன. 5 புதுச்சத்திரம் ஒன்றியத்திலும், 24- இல் எருமப்பட்டி ஒன்றியத்திலும், 27-இல் பரமத்தி ஒன்றியத்திலும், பிப். 4-இல் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலும், 17-இல் ராசிபுரம் ஒன்றியத்திலும், 23-இல் மல்லசமுத்திரம் ஒன்றியத்திலும், மாா்ச் 4-இல் பள்ளிபாளையம் ஒன்றியத்திலும், 8-இல் வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்.பாஸ்கா், உதவி இயக்குநா் பி.மருதப்பாண்டி, கால்நடை மருத்துவா்கள் மு.நடராஜன், ராஜேந்திரன் உள்பட உதவி மருத்துவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT