நாமக்கல்லில், புயலின் தாக்கத்தால் வெள்ளிக்கிழமை கடும் குளிா் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனையொட்டி, பெரும்பாலான வட மாவட்டங்களில் பரவலான மழையும், குளிரும் அதிக அளவில் காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் கடுமையான குளிா் நிலவியது. நடுங்க வைக்கும் அளவில் பகலிலும், இரவிலும் குளிரின் தாக்கம் இருந்ததால் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டினா். சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.