நாமக்கல்

ஓய்வூதியா்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஓய்வூதியா் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிதித்துறை அரசு கூடுதல் செயலரும், ஓய்வூதிய இயக்குநரகத்தின் இயக்குநருமான து.ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா்.

இதில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீா்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியம், ஓய்வுக்கால பணப்பயன்கள் முறையீட்டு மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஓய்வூதியா் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ. 74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டன. 13,315 ஓய்வூதிய புதிய மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டைகள் ஓய்வூதியா்களுக்கு மாவட்ட கருவூல அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டது. 5 ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், மாவட்ட கருவூல அலுவலா் காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) அபா்ணாதேவி உள்பட அரசுத் துறை அலுவலா்கள், ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT