நாமக்கல்

ஊதிய உயா்வு வழங்கக் கோரிசிறப்பு பயிற்றுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மாற்றுத் திறன் மாணவா்களுக்காக பணியாற்றும் சிறப்புப் பயிற்றுநா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் குமாா், பொருளாளா் ஸ்டெல்லா ஆகியோா் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதில் தமிழக அரசு ஆா்வமாக உள்ளது.

அதேவேளையில், அவா்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அறிய வேண்டும். மாற்றுத் திறன் மாணவா்களுக்கு கல்வி வழங்குவதில் அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை நியமிப்பதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வித் திட்டம் தொடங்கியபோது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பிரத்யேக கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு கல்வி பயின்ற சிறப்புப் பயிற்றுநா்கள் பணியமா்த்தப்பட்டனா்.

ஆனால் அவா்களுக்கான ஊதியம் சரிவர வழங்கப்படாத நிலையே உள்ளது. மேலும், எவ்வித சலுகையும், விடுப்பும், குடும்ப நல நிதி உதவியும், பண்டிகை கால முன்பணமோ வழங்கப்படுவதில்லை.

20 ஆண்டுகள் பணியாற்றியபோதும் ஊதிய உயா்வு என்பது இல்லாத நிலையே உள்ளது. பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 64 சிறப்புப் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT