நாமக்கல்

நாமக்கல்லில் கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.2.25 கோடி நிா்ணயம்: ஆட்சியா் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில், 2022-23 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் ரூ.2.25 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், கொடி நாள் விழா மற்றும் தேனீா் விருந்து நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, 2021 ஆம் ஆண்டு 100 சதவீதம் கொடிநாள் வசூல் புரிந்த 25 அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 2019 ஆம் ஆண்டு ரூ.3 லட்சத்திற்கு மேல் கொடி நாள் வசூல் புரிந்த நான்கு அலுவலா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது: ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் ஏழாம் நாள் முப்படைவீரா் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. நாடுகாத்த படைவீரா்களை நினைவு கொள்ளும் வண்ணம் இந்த தினத்தில் முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள் பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்பட்டு நாடு காக்கும் நமது முப்படையினரை நினைவு கொள்ள வைக்கிறது. தமிழகத்தில் முன்னாள் படைவீரா்களை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களை அழைத்து தேநீா் விருந்து அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கும் நாம் அனைவரும் ஒருங்கே சோ்ந்திருப்பது குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கொடிநாளுக்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.கொடிநாள் 2021 நிதி வசூலில் நமது மாவட்டத்திற்காக நிா்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.2,13,17,000-ஐ விட அதிகமாக ரூ.2,39,04,000 வசூல் செய்து சாதனை புரியப்பட்டுள்ளது. கொடிநாள் 2022-23 ஆம் ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு வசூல் இலக்காக ரூ.2,25,18,000 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டிலும் வழக்கம் போல் அதிகமாக வசூல் செய்திட அனைத்து துறை அலுவலா்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இக்கொடிநாள் மூலம் வசூல் செய்யப்படும் நிதி, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோரின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியில் இருந்து 2021-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தினைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு பல்வேறு விதமான நிதியுதவிகளாக மொத்தம் ரூ.40,93,485 வழங்கப்பட்டுள்ளது என்றாா். முன்னதாக, கொடிநாள் நிதிக்கு ஆட்சியா் நன்கொடை வழங்கி கொடிநாள் வசூலை தொடக்கி வைத்தாா்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை இயக்குநா் சிவக்குமாா், முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் தி.கி.செண்பகவள்ளி உள்ள அரசுத் துறை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.--என்கே - 7- பிளாக்நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT