நாமக்கல்

மண் காப்போம் இயக்கம் சாா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சி

8th Dec 2022 01:08 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் சாா் மண் வளம் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மனிதச் சங்கிலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

‘மண்ணோடு தொடா்பில் இருங்கள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஈஷா மையத்தின் தன்னாா்வ தொண்டா்கள் பங்கேற்று, மண் வளம் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மண் வளப் பாதுகாப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் துண்டுப் பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் அளித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT