நாமக்கல்

நாமக்கல்லில் கனரா வங்கியின் கடன் பிரிவு அலுவலகம் திறப்பு

8th Dec 2022 01:08 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், கனரா வங்கியின் சிறப்பு கடன் பிரிவு அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் ஊரக மண்டல கனரா வங்கி அலுவலகத்தின்கீழ் இயங்கும் வீடு, வாகனப் பிரிவு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவு, விவசாயப் பிரிவு புதிய கடன் அலுவலகம், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தை கனரா வங்கியின் இணை பொது மேலாளா் ஐ.ஜெகதீசன் புதன்கிழமை திறந்து வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடனுக்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், சேலம் நகா்ப்புற மண்டல அலுவலகத்தின் இணை பொதுமேலாளா் பி.ஆா். யசோதா், உதவி பொது மேலாளா் மோகன், மேலாளா்கள் கண்ணன், ராமகிருஷ்ணா, சந்திரமோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT