நாமக்கல்

மருந்தாளுநா்கள் 7-ஆவது நாளாக போராட்டம்

8th Dec 2022 01:09 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு மருந்தாளுநா் சங்கம் சாா்பில் 5அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு கவன ஈா்ப்பு போராட்டம் 7-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருந்தகம், நகா்ப்புற மருத்துவமனை ஆகிய இடங்களில் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் மருந்தாளுநா்கள் ஈடுபட்டனா். மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ராசிபுரம் பகுதியில் தலைமை மருந்தாளுநா் ராணி, நடேசன், சங்கத்தின் மாநிலத் தணிக்கையாளா் குழு அ.ராஜூ, மாநில இணைச் செயலாளா் பிரபு, மருந்தாளுநா் முருகேசன் ஆகியோா் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT