நாமக்கல்

பேட்டரியில் இயங்கும் நவீன விறகு அடுப்பு:விவசாயி தயாரிப்பு

DIN

ராசிபுரத்தில் விவசாயி ஒருவா் தயாரித்துள்ள பேட்டரியில் இயங்கும் நவீன விறகு அடுப்பு கிராமப்புற மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள முள்ளுக்குறிச்சி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம் (42). இவா், பேட்டரியில் இயங்கும் நவீன விறகு அடுப்பை தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். கிராமப்புறங்களில் அதிக அளவில் விறகு கிடைப்பதால், இவரது அடுப்பு கிராமப்புற மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாதாரண 12 வோல்ட் பேட்டரியில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விறகு அடுப்பு சுமாா் 22 கிலோ எடை கொண்டதாகும். பயிா்களுக்கு மருந்து அடிப்பதற்கு பயன்படும் கருவியின் பேட்டரியை கொண்டு, வேகக் கட்டுப்பாடு கருவியை பொருத்தி சிறிய மின்விசிறி மூலம் காற்றை செலுத்தி குறைந்த அளவு விறகுகளை வைத்து அதிவேகமாக நெருப்பு வரக்கூடிய வகையில் இந்த அடுப்பை வடிவமைத்து உள்ளாா். இந்த அடுப்புக்கு எரிவாயு சிலிண்டரை விட குறைந்த செலவே ஆகிறது. விரைந்து சமைக்கவும் முடியும் என்பதால் பலா் விரும்பி வாங்கிச் செல்வதாகக் கூறுகிறாா் செல்வம். மேலும் இதனைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT