நாமக்கல்

கிருத்திகை விழா: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

7th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல் - மோகனூா் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலை 6.30 மணிக்கு கணபதி பூஜையுடன் கிருத்திகை விழா தொடங்கியது. ஓம் சக்தி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், சக்தி பூஜை, பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. மேலும், திருக்காா்த்திகையை முன்னிட்டு 1008 அகல் விளக்குகள் கோயில் முன்பாக ஏற்றப்பட்டன. இதேபோல, நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகா் கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ராஜஅலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. நாமக்கல்-துறையூா் சாலை ரெட்டிப்பட்டியில் உள்ள கந்தகிரி பழனியாண்டிவா் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. நாமக்கல், கருங்கல்பாளைம், கரையான்புதுாா் கருமலை, தண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT