நாமக்கல்

தோட்டக்கலை விவசாயிகள் இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு

7th Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

நாமக்கல் வட்டாரத் தோட்டக்கலை விவசாயிகள் இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்து நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் வட்டார தோட்டக்கலைத் துறையில், மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் வீட்டு மூலிகை தோட்டத்தளைகள் வழங்கப்பட உள்ளன. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், பதிவு செய்வது அவசியமாகும். எனவே, விவசாயிகள், என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள், நடப்பு நிதியாண்டில் இருந்து பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கே, திட்டபயன்கள் வழங்கப்படும். இணைவழியில் பதிவு செய்யஇயலாத விவசாயிகள், நாமக்கல் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT