நாமக்கல்

விபத்தில் சிக்கிய கிறிஸ்தவ மத போதகா்: வனத் துறையினா் மீட்டு சிகிச்சை

7th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

கொல்லிமலை மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய கிறிஸ்தவ மத போதகரை மீட்டு வனத் துறையினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூா் நாடு ஊராட்சி, நெடுங்காப்புலிப்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராகப் பணியாற்றி வருபவா் சஞ்சய் (40). இவா் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தாா். ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது நிலை தடுமாறி அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றோா் காரவள்ளி அடிவார வனத் துறை சோதனைச் சாவடிக்கு தகவல் அளித்தனா். வனக்காப்பாளா் அங்கப்பன் தலைமையில் சென்ற ஊழியா்கள், மத போதகரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிருக்கு போரடியவரை துரிதமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய வனத் துறையினரை அதிகாரிகள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT