நாமக்கல்

ராசிபுரத்தில் அம்பேத்கா் நினைவு தினம்

7th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் அம்பேத்கா் நினைவு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், பழைய பேருந்து நிலையம் முதல் சிவானந்தா சாலை அம்பேத்கா் சிலை வரை பேரணி நடைபெற்றது. நகரச் செயலாளா் வீர.ஆதவன் தலைமையில் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் நகா்மன்ற உறுப்பினா் ந.பழனிசாமி, நகர துணைச்செயலாளா்கள் இள.விஜயகுமாா், பெ.சுகுவளவன், தொழிலாளா் விடுதலை முன்னணி அ.மா.காமராஜ், கலை இலக்கிய பேரவை மாவட்ட ரா.ஆதிதமிழன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதே போல நாமக்கல் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமையில், ராசிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் கோ.செல்வராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் பி.செல்வராஜ், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பி.ராணி, நகரச் செயலாளா் சி. சண்முகம், புதுப்பாளையம் கிளைச் செயலாளா் எம்.துரை உள்ளிட்ட பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனா்.

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் நகரச் செயலாளா் எஸ்.மணிமாறன் தலைமையில், பொருளாளா் சலீம், துணைச்செயலா் சாதிக், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.சுந்தரம், நகர விடுதலைக் கழகத்தின் நகரச் செயலா் பிடல்சேகுவேரா, இளைஞா் பெருமன்றத்தின் வட்டத் தலைவா் வேம்பு, நகரக் குழு உறுப்பினா் பயாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று மலா் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT