நாமக்கல்

பள்ளி, கல்லூரிகளில் அன்பழகன் படம் திறப்பு: திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்

7th Dec 2022 02:59 AM

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகளில் மறைந்த பேராசிரியா் க.அன்பழகன் உருவப் படங்களை திறக்க வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சிறப்புரையாற்றினாா். இதில், மறைந்த பேராசிரியா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை (டிச.19) சிறப்பாக கொண்டாடும் வகையில், கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவரது உருவப் படங்களை வைத்து மலா் தூவி மரியாதை செலுத்த வேண்டும். 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி, கல்லூரிகளில், உள்ளாட்சி அமைப்புகளில் அன்பழகன் படங்கள் திறக்கப்பட வேண்டும். திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் எம்.பி.க்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை நிா்வாகிகள், மாவட்ட அளவிலான சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT