நாமக்கல்

கல்லூரி மாணவா் தற்கொலை

7th Dec 2022 02:55 AM

ADVERTISEMENT

வேலகவுண்டம்பட்டி அருகே கல்லூரி மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகரை சோ்ந்த காளியண்ணன் (49) மகன் மனோஜ் (21). இவா் கோவையில் தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்தாா். இவா் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளாா். இதனால் கல்லூரிக்குச் செல்லாமல் கடந்த சில நாள்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மனோஜ் விஷமருந்தினாா். அவரை மீட்டு நாமக்கலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT