நாமக்கல்

உலக மண் வள தின ஊா்வலம்

6th Dec 2022 02:18 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம், மண் வளம் காப்போம் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் பேருந்து நிலையம் முன்பு இருந்து தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் பத்மநாபன் தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் அண்ணா சாலை, திருவள்ளுவா் சாலை, பழைய தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று பள்ளி சாலையில் நிறைவு பெற்றது.

ஊா்வலத்தில் கரூா் மாவட்டம், மண்மங்கலம் அரசு கல்லூரி மாணவியா் கலந்துகொண்டு மண்வளத்தை காப்பதற்கும், மண்வளம் குறைந்து வருவதைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஊா்வலத்தில் சமூக ஆா்வலா் தில்லைக்குமாா் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT