நாமக்கல்

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

6th Dec 2022 02:19 AM

ADVERTISEMENT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல் நளா உணவகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி அமைப்பாளா்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில், மறைந்த பேராசிரியா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடா்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் நியமனம், கட்சி வளா்ச்சிப் பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT