நாமக்கல்

நாமக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

6th Dec 2022 02:21 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானாா். அவரது நினைவு தினம் ஒவ்வோா் ஆண்டும் டிச. 5-ஆம் தேதி அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் நகர, ஒன்றியம், பேரூா் சாா்பில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதா உருவப் படம் வைக்கப்பட்டு, பள்ளிபாளையம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆவாரங்காடு எம்ஜிஆா் சிலை பகுதியில் ஊா்வலம் நிறைவடைந்தது. இதனையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலையிட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ். செந்தில், வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.குமரேசன், பேரூா் செயலாளா்கள் செல்லத்துரை, ஜெகநாதன், பேரவைச் செயலாளா் டி.கே. சுப்பிரமணி உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்

ஓபிஎஸ் அணி சாா்பில் மரியாதை: நாமக்கல் கிழக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி சாா்பில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளா் நாமக்கல் எம்.பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT