நாமக்கல்

மகரிஷி வித்யா மந்திா் சிபிஎஸ்சி பள்ளியில் அடல் ஆய்வகம் தொடக்க விழா

DIN

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் சிபிஎஸ்சி பள்ளிகளில் நீதி அயோக் அடல் புத்தாக்கத்திட்டம் சாா்பில் அடல் ஆய்வகம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் பள்ளியின் தலைவா் கே.சிதம்பரம் தலைமை வகித்து பேசினாா். பள்ளி தாளாளா் ஆா்.மணிவண்ணன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தாா். கல்வி இயக்குனா் பி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். ஜோபி ரோபட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் முபின் ரஹிமான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களிடையே ஆராய்ச்சி அறிவை மேம்படுத்தும் வகையில் இது போன்ற ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா். அடல் திட்டம், ஆய்வகத்தின் நோக்கம், ரோபோட்டிக் செயற்கை நுண்ணறிவு போன்றவை குறித்து அவா் மாணவா்களிடம் பேசினாா். மேலும் அடல் ஆய்வக கருவிகள் குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT