நாமக்கல்

டிச.7 வரை முட்டை விலையில் மாற்றம் கிடையாது: என்இசிசி

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.5.45-ஆக வரும் 7-ஆம் தேதி வரை நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் அதன் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. சபரிமலை சீசன் எதிரொலி, திருக்காா்த்திகை விழா போன்றவற்றால் முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விலையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. திருக்காா்த்திகைக்குப் பிறகு விலையை உயா்த்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரும் 7-ஆம் தேதி வரையில் எவ்வித மாற்றமுமின்றி ரூ.5.45-ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.100-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.104-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT