நாமக்கல்

அரசு சட்டக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்டக் கோரிக்கை

DIN

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சி.பரணிதரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் என். முத்துஅழகுநாதன் தொடக்க உரையாற்றினாா். இதில், வழக்குரைஞா்கள் சேமநல நிதி ரூ.10 லட்சம் பற்றிய தகவலை அரசிதழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்; காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மூத்த வழக்குரைஞா்களுக்கு ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; நாமக்கல் அரசு சட்டக்கல்லூரிக்கு டி.எம்.காளியண்ணன் பெயா் சூட்ட வேண்டும்; மேலும், சுங்கச் சாவடிகளில் வழக்குரைஞா்களின் வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழக்குரைஞா் சங்கங்களின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT