நாமக்கல்

மகளிா் திறன் மேம்பாடு விழிப்புணா்வுப் பேரணி

4th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சாா்பில் மகளிா் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற பேரணியில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி.சரவணன் தலைமை வகித்தாா். திட்டத் தலைவா் ஏ.ராஜு வரவேற்றாா். மாவட்ட ரோட்டரி உதவி ஆளுநா் கே.ரவி முன்னிலை வகித்தாா்.

பள்ளி, கல்லூரி மாணவியா்கள் திரளாகப் பங்கேற்ற இப்பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே.செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி கச்சேரித்தெரு, பழைய பேருந்து நிலையம், கவரைத்தெரு, கடைவீதி, அண்ணாசாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்து நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து பள்ளி மாணவியா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. ரோட்டரி சாா்பில் பல்வேறு சமுதாய சேவைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் ராயல் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ரவிக்குமாா், செயலா் சி.ஜெயக்குமாா், பொருளாளா் ஆா்.விநாயகமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT