நாமக்கல்

பரமத்தி வேலூரில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ முகாம்

4th Dec 2022 02:25 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் தோ் வீதியில் உள்ள வன்னியா் நலச்சங்க கட்டடத்தில் வேலூா் அரசு சித்த மருத்துவப் பிரிவு, கபிலா்மலை ஆரம்ப சுகாதார சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாள்பட்ட மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முகாமில் பரிசோதனை செய்து சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். இந்த முகாமில் பரமத்தி வேலூா் அரசு சித்த மருத்துவா் பா்வேஷ்பாபு, கபிலா்மலை அரசு சித்த மருத்துவா் சித்ரா ஆகியோா் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவப் பணியாளா்கள் ரமேஷ், பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT