நாமக்கல்

வளா்ச்சித் திட்டப் பணிகளை நிதி இழப்பீடின்றி மேற்கொள்ள வேண்டும்: கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை நிதியை வீணாக்காமல் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கண்காணிப்புக் குழு தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்புக் குழு தலைவரும், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் பங்கேற்றுப் பேசியதாவது:

மத்திய, மாநில அரசின் நிதிகள் வீணாக்கப்படக் கூடாது. அரசுத் துறை கட்டடங்கள் சரியான முறையில் கட்டப்பட வேண்டும். 50 ஆண்டுகள் இடியாத வகையில் ஒப்பந்ததாரா்கள் மூலம் கட்டடப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் செய்ய வேண்டும். கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட கட்டடங்கள் உரிய பராமரிப்பின்றி, பயன்பாடின்றி இருப்பது கவலையளிக்கிறது. கனிமவளங்கள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.

போக்குவரத்து தேவையுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பேருந்துகள் இயக்கத்திற்கான நடவடிக்கைகளை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எடுக்க வேண்டும். இனி நடைபெறும் மாவட்ட வளா்ச்சிக் கூட்டங்களில், அனைத்துத் துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT