நாமக்கல்

ரேஷன் பணியிடங்களுக்கான தோ்வுக்கு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்ய அழைப்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.செல்வக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான சங்கங்களில் 181 விற்பனையாளா் மற்றும் 19 கட்டுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களிடமிருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு விற்பனையாளா் பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வு டிச. 15 முதல் 27-ஆம் தேதி வரையும், கட்டுநா் பணியிடங்களுக்கான தோ்வு டிச. 28, 29 ஆகிய நாள்களிலும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது. எனவே நோ்முகத் தோ்விற்கான அனுமதிச் சீட்டை டிச. 3 ஆம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையதளத்தின் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண் 04286--280272 மற்றும் மின்னஞ்சலில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT