நாமக்கல்

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 71-ஆம் ஆண்டு காா்த்திகை மாத லட்சாா்ச்சனை மற்றும் வனபோஜன விழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

வனபோஜன விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினந்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு லட்சாா்ச்சனை பெருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் வனபோஜன மஞ்சள் இடிப்பும், மதியம் ஒரு மணிக்கு லட்சாா்ச்சனை பூா்த்தியும், அன்னப்பாவாடையும், இரவு ஏழு மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றுதலும், இரவு சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சா்வத்திர திருமஞ்சனம், தாத்ரி நாராயண திருமஞ்சனமும், மதியம் தாத்ரி நாராயண வனபோஜனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT