நாமக்கல்

நாமக்கல்லில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி: கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. கோரிக்கை

DIN

நாமக்கல்லில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைந்து அமைக்கப்பட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.எஸ்.ராஜேஷ்குமாா் பேசியது:

தமிழக அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள், நாமக்கல் மாவட்டத்தில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் போதமலையில் 75 லட்சமாவது பயனாளிக்கு சுகாதாரத் துறை சாா்பில் அமைச்சா், மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று மருந்துப் பெட்டகத்தை வழங்கினா். கா்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கான செயலியை ஆட்சியா் உருவாக்கியது பலரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, நகைக் கடன் தள்ளுபடி, ராசிபுரமத்தில் பட்டுக்கூடு ஏல மையம், நாமக்கல்லைச் சுற்றிலும் புறவழிச்சாலை அமைத்தல், அதற்கான நிலம் கையகப்படுத்துதல் என பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் 2003-ஆம் ஆண்டில் மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பிறகு அந்தக் குழுவும் கலைக்கப்பட்டதால் வங்கி உருவாகாமல் போனது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் பிரிந்து 25 ஆண்டுகளாகி விட்டது. இங்குள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் கீழ் நூற்றுக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைப் போல், நாமக்கல் மாவட்டத்திலும் மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை ஆட்சியா் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரிடம், அதற்கான கோரிக்கை மனுவை அவா் வழங்கினாா். கூட்டத்தில், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மாவட்ட திட்ட அலுவலா் சிவக்குமாா் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT