நாமக்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலையில் காா்த்திகை தீப விழா அழைப்பிதழ் வெளியீடு

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் மலையில் வரும் பௌா்ணமி தினத்தில் காா்த்திகை மகா தீப விழா நடைபெற உள்ளது.

இவ்விழா அழைப்பிதழை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன் வெளியிட்டாா். முதல் அழைப்பிதழை திருக்காா்த்திகை தீப விழா அறக்கட்டளை பொதுச் செயலாளா் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து திருக்காா்த்திகை தீப விழா அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவா் குமரவேல் தலைமை தாங்கினாா். பொருளாளா் மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினாா். கூட்டத்தில் வரும் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு மலை மீது ஏற்றப்பட உள்ள கொப்பரை மற்றும் திரிகளை பொதுமக்கள் தரிசிக்கும் விதமாக தீப நகா்வலம் நடத்துவது எனவும், பௌா்ணமி தினத்தில் அா்த்தநாரீஸ்வரா் மலை உச்சியில் அமைந்துள்ள பாண்டீஸ்வரா் கோவில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றுவது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காா்த்திகை பௌா்ணமி நாளில் (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நான்கடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 600 லிட்டா் நெய், 10 கிலோ கற்பூரம், ஆறு மூட்டை பருத்தி நூல், ஹோம திரவியங்களைக் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகாதீப நிகழ்ச்சியில் திண்டுக்கல்  பாதாள செம்பு முருகன் கோவில் மடாதிபதியும், சதாசிவானந்த சுவாமிகளும் கலந்து கொள்கிறாா்கள்.

தொடா்ந்து மூன்று நாட்களுக்கு மாலை ஆறு மணிக்கு திரிகளை மாற்றிவிட்டு மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபம் தொடா்ந்து ஐந்து நாட்களுக்கு எரியும். சுமாா் 30 கி.மீ. சுற்றளவுக்கு மகா தீபத்தின் ஒளி பிரகாசமாக தெரியும். மகா தீபத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியம் ஆனது என்று கருதப்படுகிறது.

திருக்காா்த்திகை தீபத் திருவிழா அறக்கட்டளை செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் நாகராஜன், வஜ்ரவேலு, பாா்த்திபன், ராஜா, நடேசன், பாலசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT