நாமக்கல்

டிச.11-இல் மாணவா்களுக்கான கலைப்போட்டிகள் தொடக்கம்

2nd Dec 2022 02:22 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைப்போட்டிகள் வரும் 11-ஆம் தேதி நடைபெறுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, 5 முதல் 8, 9 முதல் 12, 13 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கிடையே கலை ஆா்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் பரிசு பெறும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். வெற்றி பெறும் மாணவா்களுக்கு அரசின் சாா்பில் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டிகள் நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப்பள்ளியில் வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். போட்டிக்குத் தேவையானவற்றை சம்பந்தப்பட்ட போட்டியாளா்களே கொண்டுவர வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0427- 2386197 அல்லது 94432-24921 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT